அருப்புக்கோட்டை அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போக்சோ வழக்கு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

அருப்புக்கோட்டை அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போக்சோ வழக்கு.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்லூரணி பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் 8 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்ற போது அந்த சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். 


அப்போது சிறுமியின் உறவினரான முனியசாமி (32) என்பவர், சிறுமிக்கு பிஸ்கட் மற்றும் சாக்லெட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து, அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முனியசாமி மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad