30 அடி பள்ளத்தில் தவறி விழுந்த போதை ஆசாமி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

30 அடி பள்ளத்தில் தவறி விழுந்த போதை ஆசாமி.

களியக்காவிளை: மார்த்தாண்டம் கண்ணகோடு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 35), தொழிலாளி. இவர் நேற்று பிற்பகலில் குழித்துறை கழுவன்திட்டையில் உள்ள ெரயில்வே பாலத்தின் மீது மதுபோதையில் அமர்ந்திருந்தார். ஒரு கட்டத்தில் வினோத்குமார் மதுபோதையில் நிலைதடுமாறி பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார். இதில் காயமடைந்த அவர் அலறினார். 


அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். பின்னர் இதுபற்றி குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு அதிகாரி சந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கயறு கட்டி இறங்கி வினோத்குமாரை மீட்டனர். பின்னர், அவரை சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


- கன்னியாகுமரி மாவட்டம் செய்தியாளர் என். சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad