மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது

சோழவந்தான் பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கம்.

சோழவந்தான், ஆகஸ்ட்: 25. மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது. பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி ஸ்டாலின் தலைமை வகித்து துவக்கி மாணவ மாணவியருக்கு உணவுகளை பரிமாறினார். பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். 


பள்ளித் தலைமை ஆசிரியர் லலிதா பேபி வரவேற்றார். சமுதாய வள பயிற்றுனர் செல்வி, வரி தண்டலர்கள் வெங்கடேசன் கண்ணதாசன், பள்ளி மேலாண்மை குழு ரமேஷ், பேரூராட்சி பணியாளர்கள் வேணுகோபால், கௌதம் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


சோழவந்தான் பகுதியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வெங்கடேசன் எம். எல். ஏ .
தொடங்கி வைத்தார்

 

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்,
 முதலமைச்சர் காலை உணவு திட்ட தொடக்க விழா நடந்தது. இவ்விழாவிற்கு, வெங்கடேசன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி, திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார் . இதில், ஊராட்சி ஒன்றிய ஆணையர் கதிரவன் முன்னிலை வகித்தார்.


ஊராட்சி மன்றத் தலைவர் பவுன் முருகன், ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, துணைத்தலைவர் பாக்கியம் ,செல்வம், முன்னாள் தலைவர் ஆறுமுகம் ,கணேசன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர் தலைமை ஆசிரியர் பூங்கொடி வரவேற்றார்.


 ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன் மாறன் கார்த்திகா, ஞானசேகரன், வக்கீல் முருகன், மணிவேல், கேபிள் ராஜா, மனோகரன் ஆகியோர் பேசினார்கள் இதில், சோழவந்தான் பேரூராட்சித்தலைவர் ஜெயராமன், கவுன்சிலர் சத்திய பிரகாஷ், வெற்றிச்செல்வன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் திருசெந்தில், ஊத்துக்குளி ராஜாராமன், செல்வமணி, தமிழ்மணி, முருகேசன் உள்பட ஆசிரியர் ஆசிரியைகள் பெற்றோர்கள் கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad