தூத்துக்குடி, புதியம்புத்தூர் எஸ். புதூர் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் மகேஷ்குமார் (20) என்பவர் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி புதிய முனியசாமிபுரம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அந்த ஹோட்டலுக்கு கடந்த 02.08.2023 அன்று மதுபோதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் மகன் சித்திரைகுமார் (20) என்பவர் மகேஷ்குமாரிடம் தகராறு செய்து அவரை மதுபாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மேற்படி மகேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மரிய இருதயம் வழக்குபதிவு செய்து மேற்படி எதிரி சித்திரைகுமாரை கைது செய்தார். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி சித்திரைகுமார் மீது ஏற்கனவே தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக