திருப்பூர் வடக்கு பகுதியில் தெற்கு எம்எல்ஏ தலைமையில் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

திருப்பூர் வடக்கு பகுதியில் தெற்கு எம்எல்ஏ தலைமையில் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் தமிழக முதல்வர் திமுக தலைவருமாகிய முத்தமிழ் அறிஞர் கருணாநிதி அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் திருப்பூர் ரயில் நிலையம் , மாநகராட்சி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட செயலாளருமாகிய க. செல்வராஜ் எம்.எல்.ஏ., தலைமையில் கலைஞர் கருணாநிதி அவர்களின் திரு உருவ படம் அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 


இந்த நிகழ்வுகளில் ஒன்றாக திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வுகளில் தொமுச மாநில துணைச் செயலாளரும், திருப்பூர் தெற்கு மாநகர செயலாளருமாகிய டி. கே .டி. மு. நாகராசன், வடக்கு மாநகர செயலாளரும், மரியாதைக்குரிய மேயருமாகிய ந. தினேஷ் குமார் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, வட்ட திமுக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/