தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி திருச்செந்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று (19.08.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது திருச்செந்தூர் to தூத்துக்குடி மெயின் ரோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி நேசமணி நகரை சேர்ந்த தங்கவேல் மகன் மாரிமுத்து (29) என்பதும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக