காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பணியாளருக்கு பணி நிறைவு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் பாராட்டு !
காட்பாடி , மே 1 -
வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி பணி நிறைவு பெற்ற ஆர்.ஜீவா, ஆய்வக உதவி யாளராக பணிநிறைவு பெற்ற டி.மணி ஆகிய இருவருக்கும் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா தலைமை தாங்கினார். பள்ளி உதவித் தலைமையாசிரியர் எம்.மாரிமுத்து வரவேற்று பேசினார். ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட தலைவர்முனைவர்.செ.நா.ஜனார்த்தனன், அ.கலைச்செல்வன், உயர்நிலை உதவி தலைமையாசிரியர் பி.கணேசன், இடை நிலை உதவி தலைமையாசிரியை பி.ரோசலின் பொன்னி உள்ளிட்டோர் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டி பேசினர்.ஆசிரியர்கள் சுகந்தி, திலகலட்சுமி, எஸ்.வெங்கடேசன், நிவேதிதா, ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
அறிவியல் ஆசிரியர் பி.பாலச்சந்தர் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக