இராணிப்பேட்டை அடுத்த நெமிலி அருகே மின்கம்பி உராய்ந்ததால் வைக்கோல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

இராணிப்பேட்டை அடுத்த நெமிலி அருகே மின்கம்பி உராய்ந்ததால் வைக்கோல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த மேட்டுவேட்டாங்குளம் கிராமத்தில் வசிப்பவர் முனியம்மாள் அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக வைக்கோல் வியாபாரம் செய்து வருகிறார். 


வழக்கம்போல் இன்றும் நெமிலி அருகே விஜயபுரம் பகுதியில் (கல்லாறு அருகே) தனது ஈச்சர் வாகனத்தில் வைக்கோல் ஏற்றி கொண்டு செல்லும்போது பம்ப்பு செட்டுக்கு செல்லும் மின்சார ஒயர் மீது வண்டியில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் மின் கம்பியில் உரசியதால் தீப்பிடித்து எரிய தொடங்கியது. 


இதனை கண்ட டிரைவர் உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். சிறிது நேரத்தில் வண்டி முழுவதும் எரிய தொடங்கி அந்த பகுதியே புகைமண்டலம் போல் காட்சி அளித்தது. 


அரக்கோணம் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து நெமிலி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad