திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாத்தம்பாடி கிராமம் கோமணாம்பட்டியை சேர்ந்த சின்னழகு என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக அவரது உறவினர்களான அதே கிராமத்தைச் சேர்ந்த போஸ் (எ) பழனிச்சாமி, ராஜ்குமார், செல்வம், முருகன், பொன்னழகு ஆகியோர்கள் ஒன்று சேர்ந்து தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக நத்தம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றகாவலுக்கு அனுப்பப்பட்டனர்.
இவ்வழக்கானது திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று (04.08.23) போஸ் (எ) பழனிச்சாமி மற்றும் ராஜ்குமார் ஆகியோர்களுக்கு ஆயள் தண்டனை மற்றும் ரூ. 11,000/- அபராதமும், செல்வம்,முருகன் ஆகியோர்களுக்கு ரூ. 1000/- அபராதமும், பொன்னழகு என்பவருக்கு ரூ. 2,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் சுந்தரமூர்த்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக