திருச்செந்தூர் யூனியனில் 10000-ம் மரக்கன்றுகள் நடும் விழா! ஒன்றிய குழு தலைவர் செல்வி வடமலைப்பாண்டியன் தொடங்கிவைத்தார்!! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

திருச்செந்தூர் யூனியனில் 10000-ம் மரக்கன்றுகள் நடும் விழா! ஒன்றிய குழு தலைவர் செல்வி வடமலைப்பாண்டியன் தொடங்கிவைத்தார்!!

சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விதமாகவும் காலநிலை மாற்றத்தை வலியுறுத்தியும் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 10,000-ம்  மரக்கன்றுகள் நடும் துவக்கவிழா தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) சார்பில் நடைபெற்றது. 



நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆன்றோ, வட்டார வளர்ச்சி அலுவலர் பொங்கலரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான எம்.ஏ.தாமோதரன் தலைமையில் நடைபெற்றது.



 இவ்விழாவில் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் செல்வி வடமலைபாண்டியன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரெஜிபர்ட் ஆகியோர் மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர். 



இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் வாசுகி, இராமலட்சுமி, செல்வன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , அமுதா , 
பழநி கார்த்திகேயன், ஒன்றிய பொறியாளர் பிரேம் சந்தர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தனலட்சுமி, முத்துப்பாண்டி , பனையூர் வின்ஸ்டன், முருகேஸ்வரி , சங்கீதா , மதுரிதா சந்திரசேகரன் , சிகரம் முருகன் ஆகியோர் மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டனர்.



 நிறைவாக தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் எம்.ஏ.தாமோரதான் பேசுகையில் சுற்றுச் சூழலை பாதுகாத்து பூமியில் அதிகரித்துவரும் வெப்பத்தை குறைக்க அனைவரும் மரக்கன்றுகளை நடவு செய்ய  முன் வரவேண்டும். 



காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நாட்டின் பசுமைப் போர்வையை மேம்படுத்த வேண்டும்.



சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விதமாக திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் 10000 மரக்கன்றுகள் பாதுகாப்பான இடங்களில் எங்களது தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம். 



அதற்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளித்து உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விழாவுக்கான ஒருங்கிணைப்பு பணியை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) வாவாஜி சிறப்பாக செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/