திருச்செந்தூரில் உள்ள அரசு பள்ளியில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழா! கனிமொழி எம்.பி பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

திருச்செந்தூரில் உள்ள அரசு பள்ளியில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழா! கனிமொழி எம்.பி பங்கேற்பு!

திருச்செந்தூர் அரசு பள்ளியில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டும் பணிகளை கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், கனிமொழி கருணாநிதி எம்.பி தொகுதி நிதியிலிருந்து ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 


விழாவில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் AB.ரமேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக. H.சுந்தரராமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad