அண்ணா தொழிற்சங்க நிர்வாகி இல்ல திருமண விழாவில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்று வாழ்த்து - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

அண்ணா தொழிற்சங்க நிர்வாகி இல்ல திருமண விழாவில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்று வாழ்த்து

அண்ணா தொழிற்சங்க நிர்வாகி இல்ல திருமண விழாவில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவிப்பு உடன் ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்


கடலூர் மாவட்டம் புவனகிரியில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் வி.பி.லெனின் இல்ல திருமண விழா நடைபெற்றது.  கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக எம்எல்ஏவுமான அருண்மொழி தேவன் தலைமையில் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்கள் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்துப் பிரிவு பொருளாளர் செல்வக்குமார்-சூர்யா திருமணத்திற்கு மாங்கல்யத்தை எடுத்து தந்து, திருமணத்தை நடத்தி வைத்து  மணமக்களை வாழ்த்தினார்.இதன் பின்னர் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் ,சிதம்பரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. பாண்டியன் வருகைதந்து மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த திருமண விழாவில் நகர செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், ஒன்றிய பெருந்தலைவர் சி.என். சிவப்பிரகாசம், துணைத்தலைவர் வாசுதேவன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad