மது போதையில் பெண் மீது தாக்குதல் - இருவர் கைது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 செப்டம்பர், 2023

மது போதையில் பெண் மீது தாக்குதல் - இருவர் கைது!


வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விருதம்பட்டு காளியம்மன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் என்பவரின் மனைவி மணிமேகலை (35). இவர் காங்கேயநல்லூர் மடம் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றார்.

இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி அதே பகுதியில் தனக்கு தெரிந்த நபர் சுனில் குமார் என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அங்கு மது போதையில் வந்த சூர்யா (எ) பப்லு, மதியழகன் (எ) லோகேஷ் ஆகிய இருவர் மணிமேகலையை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர்.


இதில் காயமடைந்த மணிமேகலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் மணிமேகலை அளித்த புகாரின் பேரில் விருதம்பட்டு காவல் நிலைய போலீசார் விருதம்பட்டு பகுதியை சேர்ந்த சூர்யா( எ) பப்லு மதியழகன் (எ) லோகேஷ் ஆகிய இருவரை கைது செய்து ஜே. எம் 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad