வேடசந்தூர் அருகே நான்கு வழிச்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது டிப்பர் லாரி மோதி விபத்து - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

வேடசந்தூர் அருகே நான்கு வழிச்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது டிப்பர் லாரி மோதி விபத்து

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டியில் கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து கொடைக்கானலை நோக்கி 14 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை மைசூரைச் சேர்ந்த நசுருல்லா என்பவர் ஓட்டிச் சென்றார்.


கருக்காம்பட்டியில் தற்போது மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் பேருந்து சர்வீஸ் சாலையில் சென்றது. சர்வீஸ் சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையில் இணைவதற்காக பேருந்தை ஓட்டுநர் மெதுவாக இயக்கி உள்ளார். 


அப்பொது கரூர் தென்னிலையில் எம்.சாண்ட் மணலை ஏற்றி வந்த டிப்பர் லாரி பேருந்தின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் லாரியின் ஓட்டுனர் சுரேஷ் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.



இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை காவல்துறையினர் விபத்தில் சிக்கிய வாகனங்களை பொக்லைன் வாகனத்தின் உதவியுடன் அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வேடசந்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் வேடசந்தூர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad