பெரியார் பிறந்தநாள் விழா திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 செப்டம்பர், 2023

பெரியார் பிறந்தநாள் விழா திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரியார் பிறந்தநாள் விழா திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



 மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருமங்கலத்தை அடுத்து உள்ள முத்தப் பன்பட்டியில் பெரியாரின் 145-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பெரியாரின் உருவப் படத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி, பொதுமக்கள் பெரி யாரின் படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி இணை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், சரவணன், ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், தனசேகரன், பேரூர் செயலாளர் வருசை முகமது, மாவட்ட அணி அமைப்பாளர்கள் வில்லூர் ஞானசேகரன், பரமசிவம், வழக்கறிஞர் அணி அமைப் பாளர் ஆனந்த், கீழக்குயில் குடி செல்வேந்திரன், திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி கவுன்சிலர்கள் சின்னச்சாமி, திருக்குமார், வீரக்குமார், ஜஸ்டின் திரவியம், மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad