வாலாஜா ஆதிதிராவிட குடியிருப்பு பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 அக்டோபர், 2023

வாலாஜா ஆதிதிராவிட குடியிருப்பு பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சிக்குட்பட்ட  ஆதிதிராவிட குடியிருப்பு பொதுமக்கள்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது  வாலாஜா வட்டத்திற்குட்பட்ட அலந்தலை  கிராம பஞ்சாயத்து குட்பட்ட தரிசு நிலத்தை கையகப்படுத்தி வாலாஜா  நகர ஆதிதிராவிடர்  பொதுமக்களுக்கு  சுமார் 117 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வாலாஜா தனி வட்டாட்சியர் மூலம்  2012 ஆம் ஆண்டு  வழங்கப்பட்டது.


பட்டா வழங்கப்பட்ட இடத்தை வருவாய்த்துறையினர் இதனால் வரை பட்டாதாரர்களுக்கு அளந்து நில அளவை கல் போட்டு தராமல்  காலதாமதம் செய்து வருவதாகவும்  எனவே துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நில அளவை கல் போட்டு பயனாளிகளுக்கு இடத்தை காண்பித்து தர அந்த மனுவில் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad