தேனி மாவட்டத்தில் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் கொசு மருந்துகள் அடிக்கவும், கழிவுநீர் வாய்க்கால்களில் தேங்கியுள்ள சகதி மணல்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர் ஓ. சண்முகசுந்தரம் கோரிக்கை:
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பரவி வரும் மர்ம காய்ச்சல்களுக்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டும், கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் வகையிலும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் தீவிர படுத்தப்பட வேண்டும் எனவும், மேலும் மேற்கண்ட பகுதிகளில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் மணல் மேடுகளால் அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் தடையின்றி செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.
கழிவுநீர் தேக்கத்தின் காரணமாக கொசுக்களின் உற்பத்தி அதிகமாக உள்ளது. குறிப்பாக பெரியகுளம் பகுதியில் உள்ள பார்வதி தியேட்டரில் இருந்து காலேஜ் விலக்கு வரையிலான பகுதிகள், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகப்பேறு மருத்துவமனை முதல் பங்களாப்பட்டி பிரிவு வரையிலான பகுதிகளில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள், தென்கரை மற்றும் தாமரைக்குளம் பேரூராட்சி குடியிருப்புப் பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் மணல்மேடுகளாக காட்சியளித்து கழிவுநீர் செல்வதில் பாதிப்புகள் ஏற்பட்டு ஆங்காங்கே கழிவுநீர்கள் தேங்கிய வண்ணம், சகதிகளுடன் துர்நாற்றம் வீசி வருகின்றது.
இதனால் இப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதோடு, கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் மூலம் செல்லும் கழிவுநீர் தாமரைக்குளம் கண்மாயில் நேரடியாக கலப்பதால் கண்மாய் நீர் மிகவும் மாசடைந்து, இக்கண்மாய் நீரின் மூலம் பாசன வசதி பெறும் விவசாய விளைநிலங்கள் பாதிப்படைந்து வருகின்றன. இதனால் விவசாயமும் பாதிப்படையும் சூழல் உள்ளது. ஆகவே இவற்றிற்கு மாற்று ஏற்பாடு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கழிநீர் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததன் காரணமாக வடுகபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து இரண்டு இளைஞர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கழிவுநீர் வாய்க்கால் பகுதிகளில் தேங்கியுள்ள மணல்மேடுகளை அப்புறப்படுத்தி கழிவுநீர் தடையின்றி செல்ல வழி வகுக்க வேண்டுமாயினும், கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில் கொசு மருந்துகள் அடிக்கும் பணியில் தீவிர கவனம் செலுத்த வேண்டியும்.மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி இப்பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிட வேண்டும் என பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர் ஓ. சண்முகசுந்தரம் கோரிக்கை வைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக