திருச்செந்தூர் அடைக்கலாபுரம் ஆதரவற்றோர் காப்பகத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 அக்டோபர், 2023

திருச்செந்தூர் அடைக்கலாபுரம் ஆதரவற்றோர் காப்பகத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகிலுள்ள அடைக்கலாபுரத்தில் புனித சூசை அறநிலைய காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.  


மேலும் இங்கு கல்வி நிலையமும் உள்ளது. இதில் ஆதரவற்ற குழந்தைகளும், ஏழை மாணவர்களும் தங்கி பயின்றும் வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள தையல் பயிற்சி இரண்டாம் ஆண்டு பயின்று வந்த ஆதரவற்ற இளம்பெண்ணான ஷைனி(19) காப்பகத்திலுள்ள வேப்பமரத்தில்  வேஸ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 


இதுகுறித்து திருச்செந்தூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்ணின் உடலை திருச்செந்தூர் தாலுகா போலீசார் மீட்டு சூசை அறநிலைய காப்பகத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு பயிற்சி அருட்தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தற்கொலைக்கான  காரணமும் இதுவரை முழுமையாக வெளிவரவில்லை.
மேலும், 3 குழந்தைகள் தொடர்ச்சியாக இறந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் தலையீட்டால் இதுகுறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த தயங்குவதாக கூறப்படுகிறது.


எனவே ஆதரவற்று நிலையில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களை பல ஆண்டுகளாக பராமரித்து வரும் இந்த காப்பகத்தில் மாவட்ட நிர்வாகம் முறையாக விசாரணை மேற்கொண்டு, தற்கொலை செய்து கொண்ட இளம் பெணின் உயிரிழப்பின் மர்மம் என்ன? என்பதை விசாரணை மேற்கொள்ள வேண்டும். 


இதுபோன்று இந்த காப்பகத்தில் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad