செங்கம் அடுத்த குயிலம் ஊராட்சியில் அதிமுக கட்சியின் சார்பில் கழக செயல்வீரர்,செயல் வீராங்கனை ஆலோசனை கூட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 நவம்பர், 2023

செங்கம் அடுத்த குயிலம் ஊராட்சியில் அதிமுக கட்சியின் சார்பில் கழக செயல்வீரர்,செயல் வீராங்கனை ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் செங்கம் சட்டமன்றத் தொகுதி குயிலம் ஊராட்சியில் அதிமுக கட்சியின் சார்பில் கழக செயல்வீரர் மற்றும் வீராங்கனை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கழக அமைப்பு செயலாளர் துரை செந்தில் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.


பின்னர் பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை மகளிர் அமைப்பு குறித்த பதிவேடுகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு செங்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் அவர்கள் நன்றியுரையாற்றினார். உடன்  மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- செங்கம் செய்தியாளர் கலையரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/