நாசரேத் - ஊழல் தடுப்பு & மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை செயற்குழு கூட்டம் ஜன.27 இல் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

நாசரேத் - ஊழல் தடுப்பு & மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை செயற்குழு கூட்டம் ஜன.27 இல் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், நாசரேத், ஜன.27, ஊழல் தடுப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பேரவையின் செயற்குழு கூட்டம் இன்று நாசரேத்தில் வைத்து நடைபெற்றது.


கூட்டத்திற்கு மாநில தலைவர் செல்வன் தலைமை தாங்கினார், நிர்வாக செயலர் கல்லை சிந்தா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.


2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நஞ்சை நிலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை சரி செய்ய வேளாண் துறைக்கும், வேளாண் பொறியியல் துறைக்கும் உத்தரவிடக் கோரியும், சேதமடைந்த நிலங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கவும் திருமணம் நிறைவேற்றப்பட்டது.


ஆறுமுகனேரி நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பு காரணங்களுக்காக ரவுண்டானா அமைக்கவும், காயல்பட்டினம் வடபாகம் கிராமத்திலிருந்து ஆறுமுகனேரியை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கவும், ஆறுமுகநரி ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளமடம் கிராமத்தில் ஐந்து ஆண்டுகளாக  செயல்படாமல் உள்ள சுமார் 10 சோலார் மின்விளக்குகளை அகற்றிவிட்டு மின் இணைப்பு மூலம் செயல்படக்கூடிய விளக்குகள் அமைக்கவும்,


தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு அந்தந்த மாதங்களில் தீர்வு காணப்படுகிறதா என்பதை உறுதி செய்து மனுதாரருக்கு உரிய தீர்வு கிடைக்க வழி செய்ய கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, நகர பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/