மாநில ஸ்கேட்டிங் போட்டிகள் பாளையங்கோட்டை மாணவி மூன்றாமிடம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

மாநில ஸ்கேட்டிங் போட்டிகள் பாளையங்கோட்டை மாணவி மூன்றாமிடம்.

சென்னை, பிப் 10, மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள்
பாளையங்கோட்டை மாணவி மூன்றாமிடம் மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான 500 மீட்டர், 200 மீட்டர் தொலைவுகளுக்கான ஸ்கேட்டிங் போட்டிகள் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள ஸ்கேட்டிங் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.இதில் 200 மீட்டர் தொலைவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பாளையங்கோட்டை ஆண்டனி பப்ளிக் பள்ளி 7ம் வகுப்பு மாணவி ஜோஷினி கிரேஸ் மூன்றாமிடம் பெற்றார். ஸ்கேட்டிங் பயிற்சியாளர் தூத்துக்குடி மதார், உதவி பயிற்சியாளர் ஜீவா ஆகியோர் மாணவி ஜோஷினி கிரேஸை பாராட்டினர்.வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/