செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் நாவலூர் ஊராட்சிக்கு ட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி குழந்தைகளுக்கு வசதியுடன் அங்கன்வாடி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 பிப்ரவரி, 2024

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் நாவலூர் ஊராட்சிக்கு ட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி குழந்தைகளுக்கு வசதியுடன் அங்கன்வாடி

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் நாவலூர் ஊராட்சிக்கு ட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி குழந்தைகளுக்கு வசதியுடன் அங்கன்வாடி இல்லாத காரணத்தினால் நாவலூர் ஊராட்சி மன்ற தலைவர் மகாலஷ்மி ராஜாராம் சீரிய முயற்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 13.57 லட்சம் மதிப்பில் சமையலறை வசதியுடன் புதிய அங்கன்வாடி மையம், பெண்கள் கழிப்பிடம் 5.33 லட்சம்,ஆண்கள் கழிப்பிடம் 5.91 லட்சம் மதிப்பில் அனைத்து வசதியுடன் கட்டப்பட்டுள்ளன.இந் நிலையில் அதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் எல்.இதயவர்மன், கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை ரிப்பன்வெட்டி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.உடன் நாவலூர் ராஜாராம், நாவலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் கழக முன்னோடிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad