தூத்துக்குடி மாவட்டம், பிப்.19, தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பாக பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரச்சார கலைப்பயணத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் மாவட்ட காவல் அலுவலகம் முன்பாக கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை தேசிய பசுமைப்படை, கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரச்சார கலைப்பயணத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று (19.02.2024) மாவட்ட காவல் அலுவலகம் முன்பாக கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நதிகள், ஏரிகள் மற்றும் கடலில் கொட்டப்படும் நெகிழி மாசு குறித்தும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு நெகிழி மாசுபாடு குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜோ. பிரகாஷ், நாகர்கோவில் பைரவி பவுண்டேஷன் நிறுவனர் சோபா மற்றும் தேசிய பசுமைப்படை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
இந்நிகழ்வின் போது விழிப்புணர்வு கலைப் பயண உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக