சென்னையில் இருந்து நெல்லை வந்த வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு - கண்ணாடி சேதம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 5 பிப்ரவரி, 2024

சென்னையில் இருந்து நெல்லை வந்த வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு - கண்ணாடி சேதம்.

திருநெல்வேலி, பிப்.04, சென்னையில் இருந்து நெல்லைக்கு நேற்று மதியம் புறப்பட்ட வந்தே பாரத் ரயில் இரவு தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாச்சி அருகே நாரை கிணறு வந்தபோது  மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல். 


9 இடங்களில் கண்ணாடி உடைந்தது, ரயில் பெட்டிகளின் கண்ணாடி சேதம், நேற்று இரவு மணியாச்சி - நாரைக்கிணறு இடையே வந்த போது, புதரில் மறைந்திருந்த ஒரு கும்பல் ரயில் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. 


இதில், ஏழு பெட்டிகளில் கண்ணாடிகள் நொறுங்கிச் சிதறின. பயணியர் அலறினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும்  ஏற்படவில்லை.


இது குறித்து நெல்லை சந்திப்பு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad