செங்கோட்டை அருகே தண்ட வாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர் பலி - கொல்லம் ரயில் செங்கோட்டையில் நிறுத்தம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 பிப்ரவரி, 2024

செங்கோட்டை அருகே தண்ட வாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர் பலி - கொல்லம் ரயில் செங்கோட்டையில் நிறுத்தம்.

தென்காசி மாவட்டம், பிப்.25,
நேற்று நள்ளிரவில் செங்கோட்டை அருகே தண்ட வாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர் பலி.
இதனால் கொல்லம் ரயில் செங்கோட்டையில் நிறுத்தம்.
 
தென்காசி மாவட்டம் செங்கோட்டை  அருகே கோட்டைவாசல் பகுதியில் தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து ஏற்ப்பட்ட விபத்தில். முக்கூடல் பகுதியை சேர்ந்த லாரிடிரைவர் சம்பவஇடத்திலேயே பலியானார். 

இதனால் அதிகாலை 4 மணிக்கு வந்த சென்னை - கொல்லம் ரயில் செங்கோட்டையில் நிறுத்தப் பட்டுள்ளது.

மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மீட்புபணிகள் முடிந்ததும் ரயில் போக்குவரத்து தொடரும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: லாரியை திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுநர் மணிகண்டன் இயக்கியுள்ளார். அவருடன் உதவியாளராக பெருமாள் என்பவர் இருந்துள்ளார். இவர்களின் வாகனம் இன்று அதிகாலை 12:35 மணியளவில் புளியரை எஸ்.வளைவு பகுதியில் வந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்த லாரி, 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து எஸ்.வளைவு இரயில் தண்டவாளத்தில் தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

டார்ச் லைட் கொண்டு நிறுத்தப்பட இரயில்: அங்குள்ள கிராமத்தில் வசிக்கும் வயோதிக தம்பதி சண்முகம், வடக்கத்தி அம்மாள் மற்றும் தோட்டத்தின் காவலாளி சுப்பிரமணி ஆகியோர் விபத்து சத்தம் கேட்டு எழுந்துள்ளனர். அச்சமயம், செங்கோட்டையில் இருந்து கேரளா நோக்கி பயணிக்கும் இரயில் வரும் சத்தம் கேட்கவே, அதிர்ந்துபோன அவர்கள் டார்ச் லைட் எடுத்துச்சென்று விரைந்து இரயிலை நடுவழியில் நிறுத்தினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/