தூத்துக்குடி - கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 மார்ச், 2024

தூத்துக்குடி - கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது.

தூத்துக்குடி மாவட்டம், மார்ச்.05, கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார் நேற்று (04.03.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி 2ம் ரயில்வே கேட் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி குரூஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ரோசாரி மகன் மரிய அந்தோணி பிச்சை டைட்டஸ் (27) என்பதும், அவர் அப்பகுதியில் இருந்த ஒருவரிடம் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.



உடனே மேற்படி போலீசார் எதிரியான மரிய அந்தோணி பிச்சை டைட்டஸை  கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி மரிய அந்தோணி பிச்சை டைட்டஸ் மீது ஏற்கனவே வடபாகம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உட்பட 19  வழக்குகளும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 9 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 30 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad