விளாத்திகுளம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததால் திமுக அரசைக் கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 ஏப்ரல், 2024

விளாத்திகுளம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததால் திமுக அரசைக் கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம், ஏப்ரல் 10,  விளாத்திகுளம் அருகே உள்ள கமலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட துரைராஜ் நகர் பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 


இப்பகுதியில் முறையான சாலை வசதி, கழிவுநீர் கால்வாய், தெரு விளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாததால், கடந்த 4 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் விளாத்திகுளம் எம்.எல்.ஏ., வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வரை அனைவரிடமும் பல முறை கோரிக்கை மனுக்களை அளித்தும், பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.


இதையடுத்து துரைராஜ் நகரைச் சேர்ந்த மக்கள் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், தங்கள் கிராமத்தில் அரசியல் கட்சியினர் நுழைய அனுமதியில்லை என்றும் பேனர் வைத்துள்ளனர். 

அதுமட்டுமின்றி, தங்களது பகுதிக்கு அரசு எதுவும் செய்யாததைக் கண்டித்த அப்பகுதி மக்கள் விபூதியால் நெற்றியில் பட்டை - நாமம் போட்டுக்கொண்டும், கருப்புக் கொடிகளை ஏந்தியவாறும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/