ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம் கோடம்பாக்கம் ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி சுப்பிரமணி தலைமையில் நடைப்பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி குழு உறுப்பினரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான சுந்தராம்பாள் பெருமாள் கலந்துக்கொண்டு தூய்மை பணியாளர்கள் பணிதளப்பொறுப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து வருகிற பருவமழை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து பொது மக்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நெமிலி மதிய ஒன்றிய திமுக செயலாளர்.எஸ்.ஜி.சி.பெருமாள், உதவி ஆய்வாளர், தோட்டகலை துறை தமிழரசன் ஊராட்சி மன்ற துணை தலைவர் அன்பு, திமுகவை சேர்ந்த கோபிநாத், ரவி, வெங்கடேசன், மூர்த்தி, குணசேகர், முரளி, முக்கேஷ், சதீஷ், மேலேரி விஜய், செல்வராஜ் மற்றும் ஊராட்சி செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் பொது மக்கள் இதில் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர். மு. பிரகாசம். நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக