வாணியம்பாடி அருகே காலணி தொழிற்சாலை உரிமையாளரின் செல்போனை பறித்துச்சென்ற இளைஞர்கள் 2 பேர் கைது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கிராமிய போலீஸார் நடவடிக்கை.
வாணியம்பாடி, டிச.30 - திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை பகுதியை சேர்ந்தவர் முரளி, இவர் அதே பகுதியில் தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகிரார். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி அவர் வாணியம்பாடிக்கு சென்று இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, கிரிசமுத்திரம் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் முரளியின் விலை உயர்ந்த செல்போனை கண் இமைக்கும் நேரத்தில், பறித்துச்சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து முரளி வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு வழிப்பறியில் ஈடுப்பட்ட இளைஞர்கள் குறித்து விசாரணை செய்ததில் அவர்கள் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த அஜிஸ்(20), புலி (எ) அப்துல் ரபிக்(19) ஆகியோர் என தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு தொலைபேசி, ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர், வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக