இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி மதிய ஒன்றிய திமுக சார்பில் நெமிலி மதிய ஒன்றிய திமுக செயலாளர். எஸ். ஜி. சி .பெருமாள் மற்றும் நெமிலி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர். ஆர். பி. ரவீந்திரன் அவர்கள் தலைமையில் நெமிலி மதிய ஒன்றிய திமுக அலுவலகத்தில் பேராசிரியர். க. அன்பழகன் அவர்களின் 102 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பேராசிரியர். திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்பு மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கி மரியாதை செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் நெமிலி மதிய ஒன்றிய அவைத்தலைவர். நரசிம்மன் நெமிலி மதிய ஒன்றிய துணை செயலாளர்கள். சீனிவாசன், சரளா முரளி மாவட்ட பிரதிநிதி சம்பத், நெமிலி மேற்கு ஒன்றிய பொருளாளர். பிரகாஷ், எல்லப்பன், முரளி முகேஷ் வழக்கறிஞர். ராஜேஷ், சதீஷ், ராமச்சந்திரன் மற்றும் கிளை கழக செயலாளர்கள். மேலேரி மனோகரன், சிவராமன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
-செய்தியாளர். மு.பிரகாசம். நெமிலி தாலுகா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக