திருப்பூர் மாநகர காவல் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணிபுரிந்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி கவிதா அவர்களுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்ற தகவல் அறிந்து அவரது குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு திருப்பூர் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பாக நிறுவனர் சமூக சேவகி இந்திராசுந்தரம் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு லட்சம் ரூபாயை உதவித்தொகையாக வழங்கினார். போற்றுதலுக்குரிய இந்த உதவியை பாராட்டும் விதமாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திருமதி சு. லட்சுமி இகாப., அவர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இந்திராசுந்தரம் அவர்களை நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்து பாராட்டு சான்றிதழை வழங்கி மாநகர காவல் துறையின் சார்பில் நன்றியை தெரிவித்து கொண்டார். மேலும் இந்த நிகழ்வில் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் தலைமை செயலாளர் ராஜா முகமது கலந்து கொண்டார்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக