திமுக 14 வது வார்டு செயலாளர் லாரி மோதி உயிரிழப்பு. சர்வீஸ் ரோடு இல்லாததால் தொடரும் விபத்து - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 ஜனவரி, 2025

திமுக 14 வது வார்டு செயலாளர் லாரி மோதி உயிரிழப்பு. சர்வீஸ் ரோடு இல்லாததால் தொடரும் விபத்து


திமுக 14 வது வார்டு செயலாளர் லாரி மோதி உயிரிழப்பு. சர்வீஸ் ரோடு இல்லாததால் தொடரும் விபத்து.



மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் விமான நிலைய சாலையில் விதி மீறி வந்த லாரி மோதி திமுக வார்டு செயலாளர் பால்பாண்டி என்பவர் சம்பவ இடத்தில் பலியானார்.


திருமங்கலம் 14 வது வார்டு செயலாளர் பால்பாண்டி இவர் விமான நிலைய ரோட்டில் கமிஷன் கடை வைத்து வருகிறார் நேற்று முன்தினம் இரவு ஒன்பது முப்பது மணிக்கு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு டூவீலரில் சென்று அந்த வழியாக வந்த லாரிக்கு வழி விட ஒதுங்கினார் ரோடு குண்டும் குழியுமாக இருந்ததால் நிலை தடுமாறி லாரி முன்பு விழுந்தார் அவர் மீது லாரி சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார் அவரது உடலுக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் உட்பட  கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் விமான நிலைய சாலையில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அங்கு மேம்பால பணிக்காக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளனர். இருப்பினும் கப்பலூர் டோல்கேட்கட்டணம் செலுத்துவதை தவிர்க்க  கனரக வாகனங்கள் விதிகளை மீறி இந்த வழியாக சென்று வருகிறது. அந்தப் பகுதியில் வழிபாட்டுத்தலம், ஒன்றிய அலுவலகம் டீக்கடை ஆகியவை இன்னும் காலி செய்யப்படாமல் இருப்பதால் மாற்று பாதை அமைக்க இயலவில்லை மேலும் மெயின் ரோடு முதல் பாலம் வேலை நடக்கும் இடம் வரை ரோடு குண்டும் குழியுமாகவே உள்ளது. மேம்பாலப்பணிகள் நடக்கும் போது முறையான மாற்று பாதையை ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் இந்த சாலையில் வேலை துவங்கி ஓராண்டை  கடந்து மாற்றுப்பாதை அமைக்கவில்லை அதிகாரிகளும் முன்வரவில்லை .இதனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே இடத்தில் நகராட்சி தூய்மை பணியாளர் இரண்டு பெண்கள் லாரி மோதி பலியாகினர். இந்த அசம்பாவித நிகழ்வுகளை தவிர்க்க வேண்டுமானால் மாற்றுப் பாதை அமைக்க வேண்டும் இதை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad