நீலகிரி தாவணெ ஹட்டி, கோவை உதவி ஆணையர் (2025) ஜனாதிபதி விருது பெற்றார்.
நீலகிரி மாவட்டம் உதகை தாவணெ ஹட்டியை பூர்வீகமாகக் கொண்ட திரு. T. H. கணேஷ் அவர்கள் சிறந்த கால்பந்து வீரர் ஆவார் பட்டப்படிப்பை முடித்து ஆசிரியராகவும் பணியாற்றினார் காவல் உதவி ஆய்வாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று 1997 ஆம் ஆண்டு போலீஸ் பயிற்சி முடித்து பல அனுபவங்களை பெற்றார் . 2008 ல் காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று பல சவாலான சம்பவங்களில் சிறப்பாக செயற்பட்டு உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்றார். 2017 ஆம் ஆண்டு அவரது சிறப்பான பணிக்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் கையால் அண்ணா விருதை பெற்றார். தற்போது கோவை மாநகர் காட்டூர் சரக உதவி ஆணையராக உள்ளார் அவரது மிக மிக சவாலான சிறப்பான பணியை பாராட்டி 2025 ஆம் ஆண்டிற்க்கான ஜனாதிபதி விருதை பெற்றுள்ளார்.
ஜனாதிபதி விருதை பெற்ற கோவை மாநகர் காட்டூர் சரக உதவி ஆணையரும் நீலகிரி மாவட்டம் உதகை தாவணெ ஹட்டியை சேர்ந்தவரும் ஆன திரு. T. H. கணேஷ் அவர்களுக்கு நீலகிரி மாவட்ட மக்கள் மற்றும் காவல்துறையினர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர்.
தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் அவரது பணி மென்மேலும் சிறக்க மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக