இராமநாதபுரம் உத்திரகோசமங்கை அருகே 2 அரசு பேருந்து மோதி விபத்து - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 ஜனவரி, 2025

இராமநாதபுரம் உத்திரகோசமங்கை அருகே 2 அரசு பேருந்து மோதி விபத்து

 


இராமநாதபுரம் உத்திரகோசமங்கை அருகே 2 அரசு பேருந்து  மோதி விபத்து 

 

இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே 2 அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயம் அடைந்துள்ளனர்.ராமநாதபுரத்திலிருந்து முதுகுளத்தூர் சென்ற அரசு பேருந்தும், ராமநாதபுரம் நோக்கி சென்ற 2 பேருந்துகளும் ஆலங்குளம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் மற்றும் ஒரு பேருந்து மீது நேருக்கு நேராக மோதி கொண்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவிகள், வேலை நிமித்தமாக செல்பவர்கள் என சுமார் 25 பேர் காயம் அடைந்தனர்.


விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு அரசு பேருந்தின் பிரேக் பிடிக்காமல் போனதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து உத்திரகோசமங்கை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இத்தகைய 2 அரசு மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad