36 ஆவது சாலை பாதுகாப்பு விழா திருமங்கலத்தில் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு விழா நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டும் வழக்கம்போல் நடைபெற்றது இதில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திருமங்கலம் நகர் போக்குவரத்துக் காவல் சார்பாக 36 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பி கே என் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருமங்கலம் உதவி கண்காணிப்பாளர் அன்சூர் நாகர் IPS, தலைமையில் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் முக்கியம், குடிபோதையில் வாகனங்களை ஓட்டாதீர்கள், வாகனம் ஓட்டும்போது செல்போன்களை பேசாதீர்கள், அதிவேகம் ஆபத்தானது, அதிக பாரம் ஏற்றாதீர்கள், என்ற விளம்பர பதாகைகள் வைத்து ஊர்வலமாக சென்றனர். நிகழ்ச்சியில் திருமங்கலம் பி.கே.என்.தலமை ஆசிரியர் ஜெயசாந்தினி, உதவி தலைமை ஆசிரியர் பாண்டி திருமங்கலம் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் பாரதி மற்றும் திருமங்கலம் தாலுகா காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக