திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற ஈரோடு மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற ஈரோடு மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள்.


தமிழியக்கம் சார்பில், ஐயன் திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 05.01.2025 அன்று நடைபெற்றது. 


நிகழ்வின் துவக்கமாக திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துச் சிறப்பு செய்யப்பட்டது. ஈரோடு அரசு மகளீர் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வை தமிழியக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ர.சுரேஷ்  மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார், மாவட்ட இணைச்செயலாளர்  முனைவர் அர.ஜோதிமணி சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுப் பேசினார். செயலாளர் தி.பவளசங்கரி  நோக்கவுரையாற்றி நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். 


நற்றமிழ் பாவலர், எழுத்தாளர் சந்திரா மனோகரன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் ஈரோடு மாவட்ட தமிழிறிஞர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஈரோடு மாட்டத் தமிழறிஞர்கள்  பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பித்தனர். 


இந்நிகழ்வில் ஈரோடு மாட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவ மாணவிகளும், பேராசிரியர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ஆ.செந்தாமரை நன்றியுரை வழங்கி நிகழ்வினை நிறைவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad