திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐய்யப்பன் தலைமையில் ஓபிஎஸ் அணியினர் தங்க ரதம் இழுத்து வேண்டினர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 ஜனவரி, 2025

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐய்யப்பன் தலைமையில் ஓபிஎஸ் அணியினர் தங்க ரதம் இழுத்து வேண்டினர்


திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐய்யப்பன் தலைமையில் ஓபிஎஸ் அணியினர் தங்க ரதம் இழுத்து வேண்டினர். பல நூறு வருடங்கள் ஓபிஎஸ் நலமுடன் வாழவும் ஒன்றிணைந்த அதிமுகவிற்கு ஓபிஎஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைத்து 2026 தேர்தலில் ஆட்சியமைக்கப் போவதாக சூளுரை - உசிலம்பட்டி MLA அய்யப்பன்.



முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களுடைய ஆதரவாளர்கள் திருப்பரங்குன்றத்தில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு.


தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட ஓபிஎஸ் அணியினர் தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.


முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்களின் 74 ஆவது பிறந்தநாள் கடந்த பொங்கல் அன்று கொண்டாடப்பட்டது.


அதனை முன்னிட்டு அவர் நீண்ட ஆயுளுடனும் வாழவும் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக அணி உருவாகவும் வேண்டி அவரது ஆதரவாளரான உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பனின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓபிஎஸ் அணியினர் தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம் எல் ஏ ஐயப்பன் கூறும் போது


அண்ணன் ஓபிஎஸ் நீண்ட ஆயுளுடன் பல நூறு வருடங்கள் வாழ வேண்டியும் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை அண்ணன் ஓபிஎஸ் தலைமையில் ஒன்றிணைத்து மெகா கூட்டணி அமைத்து வருகிற 2026 ஆம் ஆண்டு ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவோம் என்பதற்காக வழிபாடு செய்தோம்.


அதிமுகவை ஒன்றிணைக்கும் பணி எந்தளவு உள்ளது:


இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் இயக்கத்தை ஒன்று சேர்க்க வேண்டும் என்று உள்ளனர் ஆனால் ஒரு தனி நபரின் எண்ணம் அதிமுகவை ஒன்று சேர்க்கக்கூடாது என்பதாக இருக்கிறது அதனை முறையடிக்கும் வகையில் இந்த வழிபாட்டை  மேற்கொண்டம்.


உசிலம்பட்டியில் சிறுவன் பாதிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினரின் நடவடிக்கை குறித்த கேள்விக்கு:


திராவிட மாடலாச்சி 525 பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து விட்டு இன்று மக்களை வஞ்சித்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, கொலை,கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது காவல்துறை ஒரு ஏவல் துறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அதற்கு உடந்தையாக இருக்கிறது இந்த  திராவிட மாடல் அரசை வீட்டுக்கு அனுப்புவதற்காக இந்த வழிபாட்டை மேற்கொண்டுள்ளோம் 2026 ஆம் ஆண்டு அம்மா புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நல்லாட்சியை கொண்டு வருவோம் என உசிலம்பட்டி MLA ஐயப்பன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad