கோவை: கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம் அமிர்தா வேளாண்மை கல்லூரி நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கிராமப்புற விவசாய பணி அனுபவத்தின் (RAWE) ஒரு பகுதியாக, அரசம்பாளையம் ஊராட்சியில் உள்ள விவசாயிகளுக்கு மண் ஆரோக்கிய விழிப்புணர்வு குறித்த பேரணியை அரசம்பாளையம் குழு மாணவர்கள் நடத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். மண் சுகாதார அட்டை, மண்ணைப் பாதுகாக்க, சரியான நேரத்தில் மண் பரிசோதனை செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கல்லூரி முதல்வர் முனைவர் சுதீஷ் மணலில் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் சிவராஜ் பி, முனைவர் சத்யப்ரியா இ,குழு ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் காமேஷ் கிருஷ்ணமூர்த்தி, முனைவர் ராதிகா ஏஎம், முனைவர் யசோதா எம் வழிகாட்டுதல்களை வழங்கினார். மாணவிகள் அபிஜித், அங்கிதா, பத்ரா, கோகுல், மாளவிகா, நவ்யா, பார்வதி, பூவராகவன், ரகோதம், ரிதி வர்ஷிதா, உல்பால் ஆகியோர் பேசினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக