கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாக தகவல்!
வேலூர் மாவட்டம் காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் ஜனவரி 4-ம் தேதி நள்ளிரவு வரை 44 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கோடிக் கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் முக்கிய ஆவணங்கள் கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்க் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கிங்ஸ்டன் கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் அந்த கல்லூரியின் சர்வர் ரூம்-க்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர்.
இந்நிலையில், அந்த சீலை அகற்ற உத்தரவிடக்கோரி கிங்ஸ்டன் கல்லூரி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கல்லூரியின் சர்வர் ரூம்-க்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் கல்லூரியில் உள்ள கம்ப்யூட்டர்கள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை செயல்பட முடியாததால் கல்லூரியின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் முடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதி ராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கிங்ஸ்டன் கல்லூரியில் 1,400 மாணவர்கள் படிப்பதாகவும் அவர்களுக்கு தேர்வு தொடங்கி நடைபெற்று வருவதாகவும் கூறினார். கல்லூரியின் சர்வர் அறை சீல் வைக்கப்பட்டுள்ளதால் தேர்வு நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. குறிப்பாக கல்லூரி விடுதி உள்ளிட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் வேலை செய்ய முடியாத நிலை உள்ளது. அது மட்டுமல்லாமல் இது மாணவர்கள் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது எனவும் தெரிவித்தார். மாணவர்கள் நலன் கருதி சர்வர் அறைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என வாதிட்டார்.அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்
இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பி.வில்சன் சோதனைக்கு சென்றபோது ஒத்துழைப்பு அளிக்க வில்லை என கூறுவது தவறு பாஸ்வேர்ட் உள்ளிட்ட தகவல்களை தாங்கள் அளித்ததன் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு கல்லூரி நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என கூறி இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக