ஆரம்ப சுகாதார நிலையமின்றி இருக்கன்துறை ஊர் பொதுமக்கள் அவதி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 ஜனவரி, 2025

ஆரம்ப சுகாதார நிலையமின்றி இருக்கன்துறை ஊர் பொதுமக்கள் அவதி


ஆரம்ப சுகாதார நிலையமின்றி இருக்கன்துறை ஊர் பொதுமக்கள் அவதி


திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, இருக்கன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட இருக்கன்துறை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்  மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருந்ததால் ஒண்றரை  வருடத்திற்கு முன்னர்  பொதுப்பணி துறையினரால் இடித்து அகற்ற பட்டது. ஆனால் இதுவரையில் மேற்படி கட்டிடம் கட்டி தரப்படாததால் இருக்கன்துறை ஊர் முதியோர்கள் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவசர சிகிச்சைகளுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இருக்கன்துறை ஊர் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்  விரைவில் கட்டி முடிக்கப்பட்டால் இருக்கன்துறை ஊர் பொதுமக்கள் மிகுந்த பயன் பெறுவார்கள்.


திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், ராதாபுரம் தாலுகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad