ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் குடியரசு தின விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஜனவரி, 2025

ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் குடியரசு தின விழா


ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்.


  தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தி லிட்டில் பிளவர் பள்ளியில் இந்திய திருநாட்டின் 76 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாகி தமயந்தி தேசிய கொடி ஏற்றி ,மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். பள்ளியின் இயக்குனர் மாத்யூஜோயல் குடியரசு தின விழா சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி அனைவரையும் வரவேற்று ,குடியரசு தினத்தின் முக்கியத்துவம் பற்றி மாணவ ,மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பூமா, கவிதா ,ராகினி, பாண்டிச்செல்வி,திவ்யா உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad