திருப்பத்தூர் அருகே ஐந்து பாக்ஸ் அளவிலான மது பாட்டில் கடத்தி வந்த நபர் கைது! மது பாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல்!
திருப்பத்தூர்,ஜன 28 -
திருப்பத்தூர் மாவட்டம் அடுத்த சௌடேக்குப்பம் பகுதியை சார்ந்த சுப்பிரமணி மகன் மணிவேல் (வயது 47) அப்பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் டிஎஸ்பி தனிப்படையினர் சௌடேகுப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்
அப்போது அவழியாக மணிவேல் தனது காரில் ஐந்து பாக்ஸ் அளவிலான மது பாட்டில் விலை கடத்தி வந்தார் அப்போது அந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் மது பாட்டிலில் தெரிய வந்தது இதன் காரணமாக மதுபாட்டில் மற்றும் காரை பறிமுதல் செய்து மேலும் மணிவேலையும் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காரணமாக திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் மணிவேல் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் குடியரசு தின விழா நாளை நடைபெற உள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மது பாட்டில்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை பொருட்படுத்தாமல் மதுபான கடை விற்பனையாளர்கள் கள்ளத்தனமாக மது பாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக