குப்பைகளும் கழிவு நீர் கிடங்காகவும் மாறுவதால் சுற்றுலாப் பயணிகள் முகம் சுழிப்பு கண்டுகொள்ளுமா நகராட்சி நிர்வாகம்? - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 ஜனவரி, 2025

குப்பைகளும் கழிவு நீர் கிடங்காகவும் மாறுவதால் சுற்றுலாப் பயணிகள் முகம் சுழிப்பு கண்டுகொள்ளுமா நகராட்சி நிர்வாகம்?

 


படுகு இல்ல நுழைவு வாயில் நடைபாதையை குப்பைகளும் கழிவு நீர் கிடங்காகவும் மாறுவதால் சுற்றுலாப் பயணிகள் முகம் சுழிப்பு கண்டுகொள்ளுமா நகராட்சி நிர்வாகம்?

உதகை படகு இல்லம் நுலைவு வாயிலில் சுற்றுலா பயணிகளின் பயன்படுத்தும் நடைபாதையின் முன்புறம் கழிவு நீர் வழிந்தோடியும், குப்பை தெரட்டியின் கூடாரமாக மாறியுள்ளதால் சுற்றுலா பயனிகளையும் பொதுமக்களயும் முகம் சுளிக்க வைத்துள்ளது, மேலும் சுற்றுலா செல்பவர்கள் காலை முதல் டிரிப்பாக எல்லா சுற்றுலா வாகனங்கலளும் படகு இல்லம் சென்று பிறகு மற்ற சுற்றுலா தலங்களை காட்டுவார்கள் ஆனால் முதலிடமே இது போன்ற நிலையில் உள்ளதால் மற்ற இடங்களும் இதுபோன்று இருக்குமா? என ஐயப்படுகிறார்கள் இந்த சுகாதார சீர் கேட்டால் பயனிகளுக்கும், பொதுமக்களுக்கும், நடைபாதை வியாபாரிகளுக்கும் பாதிப்பு அடைகிறார்கள் என  சமுக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் குற்றம் சாட்டியுள்ளனர் மேலும் இங்குள்ள உள்ளூர்வாசிகளும் இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது மேலும் சுற்றுலா பயணிகளும் இதைக் கண்டு முகம் சுளிக்கிறார்கள் என குற்றம் சாட்டி உள்ளனர் இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்வார்களா? இதை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை நகர் செய்தியாளர்  ஷரீஃப் M., A

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad