எடக்காடு அரையட்டி பகுதியில் சிறுத்தைபுலி தாக்கி உயிர் இருந்த சதீஷ் அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சட்டமன்ற உறுப்பினர்...
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகா பிக்கட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட எடக்காடு, அரையட்டி காலணியில் வசித்து வந்த திரு சதீஷ்குமார் வயது (32) நேற்றைய தினம் (3/1/2025) தோட்ட வேலைக்கு சென்று திரும்பும் நேரத்தில் எதிர்பாராத விதமாக சிறுத்தை தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்ட உடன் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் உதகை சட்ட மன்ற உறுப்பினருமான திரு.ஆர்.கணேஷ் M.L.A அவர்கள். உயிரிழந்த சதிஷ் அவர்களுடைய குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், வரக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த விபத்தினை பற்றி மாண்புமிகு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நிவாரணம் பெற்று தருவதாக தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் வினோத் குமார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக