ஊட்டி அருகே காட்டு மாடு தாக்கி ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் காரமடை பகுதியை சேர்ந்தவர் சக்தி (42). இவர் தன்னுடைய மகன் வினுவுடன் இருசக்கர வாகனத்தில் வேலை சம்பந்தமாக ஊட்டிக்கு வந்தார். வேலை முடிந்துவிட்டு செல்லும் போது துனோி அருகே சென்றபோது தேயிலை கொளுந்து பறிப்பதற்காக வாகனத்தை நிறுத்தி இறங்கியுள்ளார். பின்னர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் சக்தி தேயிலை பறித்து கொண்டிருந்துள்ளார். அப்போது, புதர் மறைவில் இருந்த காட்டு மாடு அவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத் குமார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக