சமூக விரோத செயல்கள் நடைபெறும் பகுதியாக மாறிவரும் கூடலூர் அரசு கலைக் கல்லூரி வளாகம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 ஜனவரி, 2025

சமூக விரோத செயல்கள் நடைபெறும் பகுதியாக மாறிவரும் கூடலூர் அரசு கலைக் கல்லூரி வளாகம்


சமூக விரோத செயல்கள் நடைபெறும் பகுதியாக மாறிவரும் கூடலூர் அரசு கலைக் கல்லூரி வளாகம் 


நீலகிரி மாவட்டம் கூடலுார் ஆமைக்குளம் பகுதியில் உள்ள, பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் உறுப்பு கல்லுாரியை, 2003ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தொடர்ந்து, இக்கல்லுாரிக்கு கோழிப்பாலம் பகுதியில், வருவாய் துறை சார்பில், 15 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கப்பட்டு வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டன. தொடர்ந்து, ஆமைக்குளம்; கோழிப்பாலம் ஆகிய பகுதிகளில் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.


அதில், கோழிப்பாலம் கல்லுாரி வளாகத்தில், பல்கலைக்கழகம் சார்பில், 1.77 கோடி ரூபாய் செலவில் ஆசிரியர் மாளிகை கட்டடம் கட்டப்பட்டு, 2020 நவ., 6ல் திறக்கப்பட்டது. அந்த பராமரிப்பு இன்றி மூடி கிடக்கிறது.


இதனை ஒட்டி உள்ள, அரசு மாணவ, மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. கல்லுாரி-; விடுதிகள் உள்ள இடைப்பட்ட பகுதியில் உள்ள பொதுவழியை, மக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். அதனால், அப்பகுதி பொது இடம் போன்று காணப்படுகிறது.


இந்நிலையில், இக்கல்லுாரி, 2018--19ல் அரசு கல்லுாரியாக மாற்றப்பட்டது. ஆனால், கல்லுாரியை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால், உறுப்பு கல்லுாரியாக இருந்த போது, பயன்படுத்திய பழைய கம்ப்யூட்டர்கள், ஆய்வ உபகரணங்களை மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


இங்கு ஆண்டுதோறும், 1000 மாணவர்களுக்கான சேர்க்கை நடந்து வந்தது. போதிய உட்கட்டமைப்பு வசதகிள் இல்லாததால், நடப்பாண்டு மாணவர் சேர்க்கையில், 60 சதவீதம் குறைந்துள்ளதுஅரசு கல்லுாரி வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் நுழைந்து, மது குடித்துவிட்டு மது பாட்டில்களை கல்லுாரி வளகத்தில் வீசி செல்வது தொடர்கிறது.


இதனால், மாணவ, மாணவியரை அனுப்ப பெற்றோர் அச்சப்படும் சூழல் தொடர்கிறது.


பெற்றோர் கூறுகையில், 'இந்த கல்லுாரியில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதற்கான நிதியும் அரசால் ஒதுக்கப்படவில்லை.


சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்ததை போன்ற அசம்பாவிதம் இங்கு நடக்க கூடாது.


எனவே, இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கல்லுாரியில் சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசு கல்லுாரிக்கு தேவையான உபகரணங்கள், ஆய்வகங்கள் அமைக்க வேண்டும். கல்லுாரியில் விழாக்கள் திறந்தவெளியில் நடைபெறுவதை தவிர்க்க, அனைத்து வசதிகளுடன் கூடி நிகழ்ச்சி கூடம் அமைக்க வேண்டும்,' என்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad