நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கல்வி உதவித்தொகை ஆதார் இணைப்பு சிறப்பு முகாம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 ஜனவரி, 2025

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கல்வி உதவித்தொகை ஆதார் இணைப்பு சிறப்பு முகாம்.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கல்வி உதவித்தொகை ஆதார் இணைப்பு சிறப்பு முகாம்.

தூத்துக்குடி மாவட்டம், ஜன.07, ஏரல் தாலுகா 
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை, ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு இணைப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. 

பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் சாரா ஞானபாய் மற்றும் சார்லஸ் திரவியம் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பள்ளிக் கல்வித்துறை ஆதார் இணைப்பு அலுவலர் சாந்தி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ஆதார் இணைப்பு பணிகளை செய்தார். 

மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, மாவடி பண்ணை, தூய யோவான் மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாசரேத் மற்றும் தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி, மூக்குபீறி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டனர். 

ஏற்கனவே பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து தற்போது கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை மற்றும் ஆதார் எண் இணைப்பு மேற்கொள்ளப்பட்டது. 

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad