சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்



தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி சேலம் மத்திய மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடைபெற்ற சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற 18ஆம் தேதி சென்னையில் நடைபெறுகின்ற திமுக வழக்கறிஞர் அணியின் மாநில மாநாட்டில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து திமுக வழக்கறிஞர் அணிக்கு வளர்ச்சி நிதியாக சேலம் மத்திய, மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் தலா 5 லட்சத்திற்க்கான காசோலை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக சட்டத்துறை இணை செயலாளர் திரு.ரவிச்சந்திரன், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.டி.எம்.செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. எஸ்.ஆர் சிவலிங்கம், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், கழக வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad