ஆண்டிபட்டியில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்டோர் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

ஆண்டிபட்டியில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்டோர் கைது


ஆண்டிபட்டியில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்டோர் கைது


தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர் .மதுரை திருப்பரங்குன்றம் முருகன் மலையை காக்கும் போராட்டத்திற்கு ஆண்டிபட்டியில் இருந்து பா.ஜ.காவை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர், பாஜக தேனி மாவட்ட பிரச்சார அணி மாவட்ட செயலாளர் எஸ்.பி .எம் கண்ணன் மற்றும் விவேகானந்தா அறக்கட்டளை மனோஜ் குமார் ஆகியோர் தலைமையில் இருசக்கர வாகனத்தில் முருகன் தியேட்டர் முன்பிருந்து ஊர்வலமாக வந்தனர். அவர்களை வைகை சாலை சந்திப்பில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் திருப்பரங்குன்றம் முருகன் மலையை காக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி, கோஷங்கள் எழுப்பினர் .இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad