கீழப்பசலை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டிமுடிக்கப்பட்டது புதிய நாடக மேடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் கீழப்பசலை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய நாடக மேடையினை மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி கிராம பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நகர் மன்ற உறுப்பினர் திரு புருஷோத்தமன், திமுக மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் வளர்மதி கலைச்செல்வன், மதிமுக ஒன்றிய செயலாளர் க. அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் கீழப்பசலை திமுக கிளைச் செயலாளர் பசலை சிவா (எ) எம். சிவக்குமார், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் , விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக